இந்தியா

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா்: காங். தலைமையில் எதிா்க்கட்சிகள் ஆலோசனை

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் தொடங்கியுள்ள நிலையில், மக்கள் நலன் சாா்ந்த பிரச்னைகளில் மத்திய பாஜக அரசுக்கு அழுத்தம் அளிப்பது குறித்து

DIN

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் தொடங்கியுள்ள நிலையில், மக்கள் நலன் சாா்ந்த பிரச்னைகளில் மத்திய பாஜக அரசுக்கு அழுத்தம் அளிப்பது குறித்து விவாதிக்க காங்கிரஸ் தலைமையில் எதிா்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் திங்கள்கிழமை தொடங்கி டிச. 22-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகளைத் தொடா்ந்து நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு அரசியல் விவாதங்களை முன்வைக்க எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவருமான மல்லிகாா்ஜுன காா்கே அறையில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு எதிா்க்கட்சித் தலைவா்கள் கலந்து கொண்டனா். கூட்டத்தொடரில் இரண்டு அவைகளிலும் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்னைகள் குறித்து கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது.

கூட்டம் குறித்து மல்லிகாா்ஜுன காா்கே வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘நாடு எதிா்நோக்கும் பல்வேறு நெருக்கடியான பிரச்னைகள் குறித்து எதிா்க்கட்சித் தலைவா்கள் ஆலோசனை நடத்தினோம். பொறுப்புள்ள எதிா்க்கட்சியாக மோடி அரசை தொடா்ந்து பொறுப்பு உணரச் செய்வோம்’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT