சந்திரசேகர் ராவ் 
இந்தியா

முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் கே.சந்திரசேகர ராவ்

தெலங்கானா பேரவைத் தேர்தலில் பி.ஆர்.எஸ். கட்சி தோல்வியை தழுவியதைத் தொடர்ந்து, முதல்வர் பதவியை கே.சந்திரசேகர ராவ் இன்று ராஜிநாமா செய்தார்.

DIN

தெலங்கானா பேரவைத் தேர்தலில் பி.ஆர்.எஸ். கட்சி தோல்வியை தழுவியதைத் தொடர்ந்து, முதல்வர் பதவியை கே.சந்திரசேகர ராவ் இன்று ராஜிநாமா செய்தார்.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை (டிச. 3) தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆரம்பம் முதலே முன்னிலை வகித்து வருகிறது. 

பெரும்பான்மைக்குத் தேவையான 60 இடங்களுக்கும் மேல் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் தெலங்கானாவில் காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் பேரவைத் தேர்தலில் பி.ஆர்.எஸ். கட்சி தோல்வியை தழுவியதைத் தொடர்ந்து, முதல்வர் பதவியை கே.சந்திரசேகர ராவ் இன்று ராஜிநாமா செய்தார். சந்திரசேகர ராவின் ராஜிநாமாவை ஏற்பதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விமானத்தில் கரப்பான் பூச்சிகள்: மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா!

புதிய இணையத் தொடரில் சைத்ரா ரெட்டி!

ஓடிபி விவகாரம்- திமுகவின் வழக்கு தள்ளுபடி

டிரம்ப் விதித்த 25% வரி... ஆடைத் தயாரிப்புத் துறையில் 20 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்!

காணாமல் போன 3 சிறுவர்கள் சடலமாக மீட்பு: உ.பி.யில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT