இந்தியா

தெலங்கானா: பிறந்தமண்ணிலேயே பின்னடைவில் முக்கிய தலைவர்

தெலங்கானா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

DIN


தெலங்கானா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

இதில், தெலங்கானா மாநில முதல்வரும், பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான கே. சந்திரசேகர் ராவ் போட்டியிட்ட காமாரெட்டி தொகுதி, மாநிலத்தின் மிக முக்கியமான ஹாட் ஸ்பாட் எனப்படும் பரபரப்பான தொகுதியாகக் கருதப்படுகிறது.

இங்கு சந்திரசேகர் ராவ் பின்னடைவை சந்தித்துள்ளார். பாஜக வேட்பாளர் வெங்கட ரமணா ரெட்டி முன்னிலையில் உள்ளார்.

மும்முனைப் போட்டியை சந்தித்த தெலங்கானாவில், காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.  இந்தத் தேர்தலில் சந்திரசேகர் ராவ் கஜ்வெல் மற்றும் காமாரெட்டி தொகுதிகள் என இரண்டில் போட்டியிட்டுள்ளார்.

கோனாபூர் கிராமம் கேசிஆரின் சொந்தஊர். இந்த கிராமம் அடங்கிய காமாரெட்டியில் சென்டிமென்டாக அவர் போட்டியிட்டுள்ளார். ஆனால் சொந்த மண்ணியிலேயே அவர் பின்னடைவை சந்தித்திருப்பது பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. இங்கு 71 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT