கோப்புப் படம் 
இந்தியா

வெற்றி பெற்றவுடன் 5 நட்சத்திர விடுதிக்கு வரவும்: கட்சிகளின் திட்டம்!

கட்சிகள் தங்களின் வெற்றி வேட்பாளர்களைத் தக்கவைக்க 5 நட்சத்திர விடுதிகளை முன்பதிவு செய்து வருகின்றன.

DIN

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வருகிற நாடாளுமன்ற தேர்தலின் முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தேர்தல் முடிவுகளுக்குப்பின் ஏற்படும் கட்சி தாவல்களைத் தடுக்க கட்சிகள் தங்களின் வெற்றி வேட்பாளர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன.

தெலங்கானா மாநிலத்தில் கட்சிகள் 5 நட்சத்திர விடுதிகளை முன்பதிவு செய்துவருகின்றன.

பிஆர்எஸ், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிற சூழலில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

காங்கிரஸ் கட்சி, தனது வேட்பாளர்களுக்கு வெற்றி பெற்ற பிறகு சான்றிதழைப் பெற்று கொண்டு நேரடியாக ஹைதராபாத் தாஜ் கிருஷ்ணா விடுதிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அங்கிருந்து அவர்கள் கர்நாடகா மாநிலத்துக்கு இடம் மாற்றப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஏற்பாடுகளை கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் பொறுப்பேற்று மேற்கொண்டுவருவதாக்வும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

119 தொகுதிகளுக்கான தெலங்கானா சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெறத் தேவையான 61 தொகுதிகளைக் கைப்பற்றும் கட்சி ஆட்சி அமைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

SCROLL FOR NEXT