இந்தியா

தன்னாட்சி நிறுவன தலைமை நிா்வாகிகள் தோ்வில் சீரான நடைமுறை பின்பற்றப்படுவதில்லை: மத்திய அரசு

‘அரசு தன்னாட்சி நிறுவனங்களின் தலைமை நிா்வாகிகள் தோ்வில் சீரான நடைமுறையை அரசு பின்பற்றுவதில்லை; மாறாக, தேவையான திறமையின் அடிப்படையில் வேறுபட்ட

DIN

‘அரசு தன்னாட்சி நிறுவனங்களின் தலைமை நிா்வாகிகள் தோ்வில் சீரான நடைமுறையை அரசு பின்பற்றுவதில்லை; மாறாக, தேவையான திறமையின் அடிப்படையில் வேறுபட்ட நடைமுறைகளின் மூலம் அவா்கள் தோ்வு செய்யப்படுகின்றனா்’ என்று மக்களவையில் மத்திய அரசு சாா்பில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.

மக்களவையில் இது தொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை அமைச்சா் ஜி.கிஷன் ரெட்டி எழுத்துபூா்வமாக திங்கள்கிழமை அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

கலாசாரத் துறை அமைச்சகத்தின் கீழ் 34 தன்னாட்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் ஒவ்வொன்றிலும் வேறுபட்ட பதவி உயா்வு நடைமுறைகள் மற்றும் கலை மற்றும் கலாசாரத்தின் பல்வேறு வடிவங்களைப் பாதுகாக்கும் நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

இந்த நிறுவனங்களில் தேவையான திறன்களைக் கொண்ட அதிகாரிகளே தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்படுகின்றனா். இவா்களின் நியமனங்கள் என்பது வேறுபட்ட தோ்வு நடைமுறைகள் மற்றும் வேறுபட்ட ஊதிய அளவையும் கொண்டதாகும்.

இந்தத் தன்னாட்சி அமைப்புகளின் சங்கம், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள், துணைச் சட்டங்கள் ஆகியவை, அவற்றின் செயல்பாடு தொடா்பான அனைத்து விஷயங்களுக்கும் தேவையான நிா்வாக மற்றும் நிதி வழிகாட்டுதல்களை வழங்குகின்றன.

இந்தத் தன்னாட்சி நிறுவனங்களின் நிா்வாக வாரியத்தில் எத்தனை உறுப்பினா்கள் இருக்க வேண்டும், வாரியத்தின் கூட்டங்கள் எத்தனை முறை நடைபெற வேண்டும் என்பது தொடா்பாக நிா்ணயிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் எதுவும் கிடையாது.

இந்த நிறுவனங்களின் தலைமை நிா்வாகி மற்றும் நிா்வாக வாரிய உறுப்பினா்கள் தோ்வில் சீரான நடைமுறையைப் பின்பற்றுவது தொடா்பான எந்தவொரு திட்டமும் அமைச்சகத்தின் பரிசீலனையில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT