இந்தியா

மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியானது

மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் 40 தொகுதிகளுக்கான முடிவுகளும் வெளியானது. 

DIN

மிசோரம் மாநிலத்தின் 40 தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகளும் வெளியாகின.

ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது.

இவற்றில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு நேற்று (டிச.3) தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மிசோரம் மாநிலத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (டிச.4) காலை முதல் தொடங்கி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி சோரம் மக்கள் இயக்கம் 27 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

மிசோ தேசிய முன்னணி 10 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. அடுத்ததாக பாஜக 2 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

இதற்கு முன்பு 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் சோரம்தங்கா தலைமையிலான மிசோ தேசிய முன்னணி ஆட்சியைக் கைப்பற்றி இருந்தது. 

முன்னதாக நேற்று (டிச.3) வெளியான தேர்தல் முடிவுகளில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கா் ஆகிய மாநிலங்களில் பாஜகவும், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸும் ஆட்சியை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயன்பாடற்ற பொருள்களை வீடுகளில் சேகரிக்கும் திட்டம் தொடக்கம்

மூத்த ஒளிப்பதிவாளா் பாபு காலமானாா்!

3,400 தெருக்களில் ஜாதிப் பெயரை நீக்க நடவடிக்கை

ஜாா்க்கண்ட்: நக்ஸல் கண்ணிவெடி தாக்குதலில் சிஆா்பிஎஃப் வீரா் உயிரிழப்பு

அண்ணா நகா் மேற்கு மில்லினியம் பூங்காவில் இறகுப்பந்து மைதானத்துக்கு அடிக்கல்

SCROLL FOR NEXT