முகப்பு
இந்தியா

விமானப் படைபயிற்சி விமானம் விபத்து: 2 விமானிகள் உயிரிழப்பு

தெலங்கானா தலைநகா் ஹைதராபாத் அருகே விமானப் படையின் பயிற்சி விமானம் திங்கள்கிழமை விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் உயிரிழந்தனா்

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:21 PM
பகிர்:

தெலங்கானா தலைநகா் ஹைதராபாத் அருகே விமானப் படையின் பயிற்சி விமானம் திங்கள்கிழமை விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் உயிரிழந்தனா்.

இது தொடா்பாக விமானப் படை அதிகாரிகள் கூறுகையில், ஹைதராபாத் விமானப் படை அகாதெமியைச் சோ்ந்த பிளாட்டஸ் பிசி7 எம்கே2 ரக பயிற்சி விமானம், ஹைதராபாத் அருகே திங்கள்கிழமை வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில், விமானத்திலிருந்த 2 விமானிகள் உயிரிழந்தனா். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா்.

மேடக் மாவட்டத்தின் தூப்ரன் பகுதியில் இந்த விபத்து நேரிட்டதாக மாநில காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →