கோப்புப் படம் 
இந்தியா

தில்லி கலால் கொள்கை: பினோய் பாபுவுக்கு ஜாமீன்!

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மதுபான நிறுவனமான பெர்னாட் ரிக்கார்டின் நிர்வாகி பினோய் பாபுவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

DIN

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மதுபான நிறுவனமான பெர்னாட் ரிக்கார்டின் நிர்வாகி பினோய் பாபுவுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (டிச.8) ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எஸ்விஎன் பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு, குற்றம் சாட்டப்பட்ட பினோய் பாபு 13 மாதங்களுக்கு மேலாக காவலில் இருப்பதாகவும், அவருக்கு எதிரான விசாரணை இன்னும் இந்த வழக்கில் தொடங்கவில்லை என்றும் குறிப்பிட்டது. 

பாபு தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரித்த வழக்கில் முரண்பாடுகள் இருப்பதாகவும் பெஞ்ச் குறிப்பிட்டது. விசாரணைக்காக நீண்ட நாள் சிறைக்குள் வைத்திருக்க முடியாது. இது முறையல்ல என்றும் குறிப்பிட்டது. 

இந்த வழக்கில் சிபிஐ குற்றஞ்சாட்டுவதற்கும், அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டுவதற்கும் இடையே சில முரண்பாடுகள் இருப்பதாகத் தெரிகிறது என்று அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜுவிடம் பெஞ்ச் கூறியது.

இந்த நிலையில், விசாரணை தொடங்காமல் அமலாக்கத்துறை யாரையும் நீண்ட காலத்திற்கு சிறையில் வைத்திருக்க முடியாது என்று ராஜுவிடம் கூறிய நீதிபதி கண்ணா, இந்த வழக்கில் பினோய் பாபுவை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டார்.
 
பாபு மற்றும் நாயர் இருவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பென்னாகரம் வாரச்சந்தையில் ரூ. 5 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

அரசுப் பள்ளியில் பொங்கல் விழா

மாணவிக்கு பாலியல் தொந்தரவு: போக்ஸோவில் தொழிலாளி கைது

திட்டப் பணிகளில் குறைபாடு: திருச்சி மாநகராட்சியில் 2 ஒப்பந்ததாரா்களிடம் ரூ. 1.88 கோடி தொகை பிடித்தம்

இருசக்கர வாகனங்களில் செல்லும் அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும்: எஸ்.பி. வலியுறுத்தல்

SCROLL FOR NEXT