கோப்புப்படம் 
இந்தியா

தேர்தலுக்கு முன் மக்கள் மனங்களை வெல்ல வேண்டும்: பிரதமர் மோடி

சில அரசியல் கட்சிகள் தேர்தலில் வெல்வதற்கு முன்பு, மக்கள் மனங்களை வெல்ல வேண்டும் என்பதை அறிந்திருக்கவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

DIN


புது தில்லி: சில அரசியல் கட்சிகள் தேர்தலில் வெல்வதற்கு முன்பு, மக்கள் மனங்களை வெல்ல வேண்டும் என்பதை அறிந்திருக்கவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி அளிக்கும் உத்திரவாதங்கள், மக்களிடையே எதிரொலிக்கிறது என்பதை அண்மையில் நடந்து முடிந்த பேரவைத் தேர்தல் முடிவுகள் காட்டும் வகையில் அமைந்திருந்தன.

விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரையில் பங்கேற்பவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார். அப்போது அவர் பேசுகையில், சில அரசியல் கட்சிகள் போலியான உத்தரவாதங்களை அளிப்பதைத் தவிர வேறு ஒன்றையும் செய்வதில்லை.

எங்கள் அரசு, அம்மா - பிள்ளை அரசு அல்ல, ஆனால், தாய்-தந்தை போன்ற அரசு. எவ்வாறு ஒரு குழந்தை தாய்-தந்தையை பார்த்துக்கொள்ளும் வகையில், மோடி தலைமையிலான அரசு மக்களுக்கு சேவை செய்யும் என்றும் அவர் கூறினார்.

ஏழைகளுக்காக மோடி அரசு செயல்படும், யாருக்கு எந்த ஆதரவும் இல்லையோ, எல்லா அலுவலக வாயில்களும் மூடப்பட்டதோ அவர்களுக்காக நாங்கள் வேலை செய்வோம். அவர்களுக்கு சேவை செய்வதோடு மட்டுமல்லாமல், அவர்களை வழிபடவும் செய்வோம். என்னைப் பொறுத்தவரை அனைத்து ஏழைகளுமே எனக்கு மிகவும் முக்கியமானவர்கள்தான், அனைத்து தாய், மகள், சகோதரிகளும் எனக்கு முக்கியமானவர்கள்தான். ஒவ்வொரு விவசாயியும் ஒவ்வொரு இளைஞரும் எனக்கு முக்கியமானவர்தான் என்று மோடி பேசியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

நரை முடி நீங்க..!

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT