இந்தியா

பாஜக தலைமையின் கீழ் மாநிலம் மேலும் வளர்ச்சியடையும்: மோகன் யாதவ்

DIN

பாஜகவின் தலைமையின் கீழ் மாநிலத்தில் உள்ள மக்களுக்கு சேவை செய்து, வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்வோம் என மோகன் யாதவ் தெரிவித்துள்ளார். 

மத்திய பிரதேசத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட  மோகன் யாதவ் நாளை பதவியேற்க உள்ளார். அவருடன் துணை முதல்வர் ராஜேந்திர சுக்லா மற்றும் ஜெகதீஷ் தேவ்தா ஆகியரும் நாளைள பதவியேற்க உள்ளனர். 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

மத்திய பிரதேசத்தில் பாஜக பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைத்துள்ளது. 8.5 கோடி மக்களின் நம்பிக்கையை பாஜ பெற்றுள்ளது. எங்களைத் தேர்வு செய்த மக்களுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். 

ம.பி. முதல்வராகப் பதவியேற்பது குறித்த உணர்வு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு.. நான் இந்த விஷயங்களை பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. நான் கட்சியின் சாதாரண உறுப்பினர். எனக்குப் பொறுப்பான பதவி வழங்கப்பட்டுள்ளது என்பது உண்மை. மக்களுக்கு சிறப்பாகச் சேவை செய்வதில் என் முழு கவனத்தையும் செலுத்துகிறேன். 

மேலும் பதவியேற்பு விழா குறித்து பேசிய அவர், நாளை பதவியேற்பு விழா நடைபெற உள்ளதால், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா மற்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் தலைமையில் தொடங்கப்பட்ட அனைத்து வளர்ச்சித் திட்டங்களும் எனது ஆட்சியிலும் தொடரும். பாஜக அளித்துள்ள அனைத்து வாக்குறுதிகளையும் மத்திய பிரதேசத்தில் நிறைவேற்றப்பட்டும் என்றும் அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துன்பங்களைப் போக்கும் கோயில்

பி.டி. சார் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

நடமாடும் போகன்வில்லா! திவ்யா துரைசாமி..

பாவங்களைப் போக்கும்..!

படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்த சந்தானம் ரசிகர்கள்

SCROLL FOR NEXT