இந்தியா

சத்தீஸ்கர் முதல்வராக விஷ்ணு தேவ் சாய் பதவியேற்பு!

சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய முதல்வராக விஷ்ணு தேவ் சாய் இன்று பதவியேற்றுக் கொண்டார். 

DIN

சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய முதல்வராக விஷ்ணு தேவ் சாய் இன்று பதவியேற்றுக் கொண்டார். 

மத்தியப் பிரதேசத்தில் 163 தொகுதிகளில் வென்று ஆட்சியைத் தக்கவைத்த பாஜக, சத்தீஸ்கரில் 54 இடங்களுடன் காங்கிரஸிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியது.

இந்த நிலையில் பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான விஷ்ணு தேவ் சாய்(59) கடந்த ஞாயிற்றுக்கிழமை சத்தீஸ்கர் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில், குங்கரி தொகுதியின் எம்எல்ஏவான விஷ்ணு தேவ் சாய் இன்று(டிச.13) பதவியேற்றுக் கொண்டார். 

மாநில பாஜக தலைவர் அருண் சாவோ, எம்எல்ஏ விஜய் சர்மா ஆகியோர் துணை முதல்வராகப் பதவியேற்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிதின் கட்கரி மற்றும் முதல்வர்கள் கலந்துகொண்ட பிரம்மாண்ட விழாவில் விஷ்ணு தேவ் சாய், இரு துணை முதல்வர்களுக்கும் ஆளுநர் விஸ்வபூசன் ஹரிசந்தன் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். 

2020-ல் உருவாக்கப்பட்ட சத்தீஸ்கர் மாநிலத்தின் நான்காவது முதல்வராக விஷ்ணு தேவ் சாய்(59) பதவியேற்றார். அருண் சாவோ(54)ஓபசி சமூகத்தைச் சேர்ந்தவர். பிராமணரான விஜய் சர்மா(50) மாநில பாஜக பொதுச் செயலாளராக உள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மலரே... பிரீத்தி முகுந்தன்!

திமுக கூட்டணியில் குழப்பம் இல்லை: சு. திருநாவுக்கரசா்

உலகளாவிய தயாரிப்புகளை இந்தியாவிற்கு கொண்டு வரும் பிலிப்ஸ்!

நெல்லையில் பரபரப்பு... காவல் நிலையம், சோதனைச் சாவடி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு!

தவெக நிர்வாகிகளை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்த போலீசார்!

SCROLL FOR NEXT