முகப்பு
இந்தியா

சமூக சேவகர் மனைவியுடன் தூக்கிட்டுத் தற்கொலை - கர்நாடகத்தில் அதிர்ச்சி சம்பவம்

கர்நாடகத்தில் சமூக சேவகர் ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:25 PM
கோப்புப்படம்
பகிர்:

மங்களூரு : கர்நாடகத்தில் சமூக சேவகர் ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மங்களூரு பகுதியைச் சேர்ந்த சமூக சேவகரான 68 வயதான லீலாதர் ஷெட்டி மற்றும் அவரது மனைவி வசுந்தரா ஷெட்டி(58) ஆகிய இருவரும்  நேற்றிரவு தங்களது வீட்டில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர். 

உயிரிழந்த லீலாதர் ஷெட்டி, உடுப்பி பகுதியில் நாடகக் குழு ஒன்றை நடத்தி வந்துள்ளார். மேலும், மஜூர் கிராமப் பஞ்சாயத்து தலைவராகவும் பதவி வகித்தவர். இந்தநிலையில், மக்கள் செல்வாக்கு மிகுந்த நபராக இருந்த லீலாதர் ஷெட்டியின் மரணம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

லீலாதர் ஷெட்டி மற்றும் அவரது மனைவி தற்கொலைக்கான காரணம் குறித்து  காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →