கோப்பு 
இந்தியா

இமாச்சல பிரதேசத்தில் மிதமான பனிப்பொழிவு

இமாச்சல பிரதேசத்தில் பனிப்பொழிவு பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

DIN

ஷிம்லா: இமாச்சல பிரதேச மாநிலத்தின் உயர்ந்த மலைகளும் சிகரங்களும் உள்ள கின்னார், லஹவுல், ஸ்ப்தி மற்றும் குலு ஆகிய மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் மிதமான பனிப்பொழிவு பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கின்னார் மாவட்டத்தில் உள்ள கல்பா மற்றும் சங்கலா பகுதிகளில் 0.2 செமீ மற்றும் 0.1 செமீ பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.

மேற்கு பகுதியில், வெப்பமண்டலத்திற்கு மேல்மட்டதில் உருவாகிவரும் புயலால் டிச.16 வரை இமாச்சலம் பாதிக்கப்படும் எனக் கணிக்கப்படுகிறது. இருப்பினும் டிச.19 வரை பெரும்பாலான இடங்களில் வானிலை மாற்றம் இருக்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தின் குறைந்த மற்றும் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் பதிவாகவில்லை

லஹவுலில் உள்ள குகும்சேரி மற்றும் ஸ்ப்தி பகுதியில் மைனஸ் 7.3 டிகிரி வெப்பநிலை குறைந்தபட்ச அளவாகப் பதிவாகியுள்ளது. உனா பகுதியில் அதிகபட்ச வெப்பநிலை 22.7 டிகிரி செல்சியஸ் பதிவாகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓசூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

சொல்லப் போனால்... மருந்தெனப்படுவது விஷமானால்...

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

லடாக் செல்கிறது எதிா்க்கட்சிக் குழு?

SCROLL FOR NEXT