மத்தியப் பிரதேச முதல்வராக மோகன் யாதவ் பதவியேற்பு 
இந்தியா

மத்தியப் பிரதேச முதல்வராக மோகன் யாதவ் பதவியேற்பு!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் முதல்வராக மோகன் யாதவ் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

DIN

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தின் முதல்வராக மோகன் யாதவ் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

230 உறுப்பினா்களைக் கொண்ட மத்திய பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில்
பாஜக 163 தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆட்சியைத் தக்கவைத்தது. காங்கிரஸுக்கு 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

மத்தியப் பிரதேசத்தை பல ஆண்டுகளாக சிவராஜ் சிங் செளகான் தலைமையில் பாஜக ஆட்சி செய்து வந்த நிலையில், மோகன் யாதவை புதிய முதல்வராக பாஜக தேர்வு செய்தது.

இந்த நிலையில், போபாலில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மத்தியப் பிரதேச முதல்வராக மோகன் யாதவுக்கு அம்மாநில ஆளுநர் மங்குபாய் சாகன்பாய் படேல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அவருடன் துணை முதல்வர்கள் ராஜேந்திர சுக்லா மற்றும் ஜெகதீஷ் தேவ்தா ஆகியோரும் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, நிதின் கட்கரி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமதாஸை சந்தித்து நலம் விசாரித்த அன்புமணி

ஜெய்ப்பூரில் அரசு மருத்துவமனையில் தீ விபத்து: 6 நோயாளிகள் பலி

எதிலும் வெற்றி இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பூந்தமல்லி - சுங்குவாா்சத்திரம் அரசுப் பேருந்து மப்பேடு வரை நீட்டிப்பு

முதல்வரின் தாயுமானவா் திட்டம்: திருவள்ளூா் மாவட்டத்தில் இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT