மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா(கோப்புப்படம்) 
இந்தியா

எம்.பி.க்களின் உதவியாளர்களுக்கு அனுமதி இல்லை: ஓம் பிர்லா

நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியாளர்களுக்கு நாடாளுமன்ற வளாகத்தில் அனுமதி இல்லை என்று மக்களைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

DIN

நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியாளர்களுக்கு நாடாளுமன்ற வளாகத்தில் அனுமதி இல்லை என்று மக்களைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

இன்று நடந்த அத்துமீறல் சம்பவத்தைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியாளர்களுக்கு வளாகத்தில் அனுமதியில்லை எனவும், மத்திய அமைச்சர்களின் உதவியாளர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும் என்று மக்களைத் தலைவர்  ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் அலுவல்கள் இன்று வழக்கம்போல் நடைபெற்று கொண்டிருந்த நிலையில், மக்களவையின் பார்வையாளர்கள் மடத்தில் அமர்ந்திருந்த இருவர் திடீரென்று பகல் 1.12 மணியளவில் அவைக்குள் குதித்தனர்.

பாதுகாப்பை மீறி நாடாளுமன்ற மக்களவைக்குள் இருவர் நுழைந்து புகைக் குண்டுகளை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மக்களவையின் பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்த இருவர், திடீரென்று அவைக்குள் குதித்து ‘சர்வாதிகாரம் ஒழிக’ என்ற முழக்கங்களை எழுப்பியபடி, கையில் வைத்திருந்த மஞ்சள் நிறப் புகைக் குண்டுகளை வீசியுள்ளனர். 

இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினரின் பரிந்துரையின் பேரில் அனுமதிக்கப்பட்ட பார்வையாளர் அத்துமீறியதால் பாதுகாப்பை அதிகரிக்க  நடவடிக்கை எடுக்கப்ப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ.87.58ஆக நிறைவு!

நூறு கோடி வானவில்... மாளவிகா மனோஜ்!

இதுவரை இல்லாத பேட்டரி திறன்... விவோ ஒய் 500 சிறப்புகள் என்ன?

மலையாளக் கவிதை... அனுமோள்!

'அவர் என்னுடைய அம்மாவே இல்லை' - பவுன்சரால் தூக்கிவீசப்பட்ட இளைஞர் விளக்கம்!

SCROLL FOR NEXT