இந்தியா

வாராக்கடன் வசூல் ரூ.1.61 கோடி... மீதம் ரூ.8.79 லட்சம் கோடி என்ன ஆனது? சு.வெங்கடேசன் கேள்வி

DIN


நாட்டில் கடந்த 9 ஆண்டுகளில் வாராக்கடன் ரூ.10.42 லட்சம் கோடியில், வசூலானது ரூ.1.61 லட்சம் கோடி மட்டுமே. மீதம் 8.79 லட்சம் கோடி என்ன ஆனது? என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் சொல்லுங்கள் என மதுரை மக்களவை உறுப்பினர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

நாடாளுமன்றத்தில் வங்கிக் கடன்கள் குறித்து நான் எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சா் பகவத் கராட் அளித்துள்ள பதிலில், 2014-15 இல் இருந்து 2022-23 வரை வாராக்கடன் என அறிவிக்கப்பட்ட தொகை ரூ.10.42 லட்சம் கோடி என்றும், இதே காலகட்டத்தில் வசூலிக்கப்பட்ட வாராக்கடன் ரூ.1.61 லட்சம் கோடி என பதிலளித்துள்ளார்.

எப்போது வாராக்கடன் பற்றி பேசினாலும் வாராக்கடன் என்றால் வராமலே போகிற கடன் அல்ல, அதற்கு பின்னரும் வசூலிக்கப்படும் என்ற நீண்ட விளக்கத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தருவார். எல்லோருக்கும் ஏதோ இந்த வாராக்கடன் ரூ.10.42 கோடியையும் விரட்டி விரட்டி மத்திய அரசும், வங்கிகளும் வசூலித்து விடும் என்று எண்ணத்தை நிதியமைச்சர் உருவாக்குவார். இதைப்பற்றி பேசுபவர்களுக்கு ஏதோ பொருளாதாரமே தெரியாது என்ற எள்ளல் நடையிலும் பேசுவார். ஆனால், கடந்த 9 ஆண்டுகளில் வாராக்கடன் ரூ.10.42 லட்சம் கோடி என்றும், இதே காலகட்டத்தில் வசூலிக்கப்பட்ட வாராக்கடன் ரூ.1.61 லட்சம் கோடி என பதிலளித்துள்ளார் என்றால் நமக்கு எழும் கேள்வி இதுதான். 

நிதியமைச்சரே வசூலுக்கும் வாராக்கடனுக்கும் இடையே இவ்வளவு வித்தியாசம் உள்ளதே, இதற்கு பெயர் என்ன வரும் ஆனா வராது என்றால் அதற்கு பெயர் என்ன? வாராக்கடனா? வஜாக்கடனா? என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் சொல்லுவாரா என சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

SCROLL FOR NEXT