இந்தியா

பிறந்தநாளில் ராஜஸ்தான் முதல்வராகப் பதவியேற்கும் பஜன்லால் சர்மா!

ராஜஸ்தான் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள பஜன்லால் சர்மா தனது பிறந்தநாளான டிசம்பர் 15-ம் தேதி பதவியேற்க உள்ளார். 

DIN

ராஜஸ்தான் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள பஜன்லால் சர்மா தனது பிறந்தநாளான டிசம்பர் 15-ம் தேதி பதவியேற்க உள்ளார். 

பதவியேற்பு விழா ஆல்பர்ட் மண்டப அருங்காட்சியகத்தில் நடைபெற உள்ளதால், ஒருநாள் முன்னதாகவே சுற்றலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அப்பகுதி முழுவதும் பலத்து போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

ராஜஸ்தான் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள பஜன் லால் சர்மா மற்றும் இரண்டு துணை முதல்வர்கள் தியா குமாரி மற்றும் பிரேம்சந்த் பைரவா ஆகியோர் டிசம்பர் 15ஆம் தேதி பதவியேற்க உள்ளனர். 

இந்த விழா ஆல்பர்ட் மண்டபத்துக்கு (ராம் நிவாஸ் பாக்) வெளியே பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த விழாவிற்கு பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, கட்சியின் தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசன் தரமாக இருக்கும்: கவின்

என்றும் என் கைகளில்..! ஹர்மன்ப்ரீத், ஸ்மிருதி மந்தனாவின் ‘ஸ்பெஷல்’ டாட்டூ!

சாலேட் ஹோட்டல் ஒருங்கிணைந்த லாபம் ரூ.154.81 கோடி!

2026ல் திமுக - தவெக இடையே மட்டும்தான் போட்டி: விஜய்

பிக் பாஸ் 9 பிராங்க்: முகத்திரை கிழிந்த போட்டியாளர்கள் - உள்ளத்தால் உயர்ந்த வினோத்!

SCROLL FOR NEXT