இந்தியா

நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம்: 4 பேருக்கு 7 நாள்கள் போலீஸ் காவல்

DIN

நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேருக்கு 7 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 4 பேரையும் 7 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவுக்கு தில்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்திய நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதல் திட்டமிடப்பட்ட சதி என்று தில்லி காவல் துறையியினர் நீதிமன்றத்தில் வாதிட்டனர்.

மேலும், இந்த அத்துமீறல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பிரதமர் மோடியை காணவில்லை என்ற துண்டுப் பிரசுரத்தை எடுத்துச் சென்றதாகவும், அவரைக் கண்டுபிடித்து தருபவர்களுக்கு சுவிஸ் வங்கியில் இருந்து பணம் வழங்கப்படும் என்ற வாக்கியம் அதில் இடம் பெற்று இருந்தனர் காவல் துறை வழக்குரைஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மக்களவையில் இரு இளைஞா்கள் புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தின் பின்னணியில் மேலும் 4 போ் இருப்பதும், நண்பா்களான இவா்கள் இணைந்து திட்டமிட்டு இந்தச் சம்பவத்தை அரங்கேற்றியதும் விசாரணையில் தெரியவந்தது.

மக்களவையில் புதன்கிழமை பாா்வையாளா்கள் மாடத்தில் இருந்த இரண்டு இளைஞா்கள் எம்.பி.க்கள் அமரும் பகுதிக்குள் குதித்து புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினா். நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் இதேபோன்று புகைக் குப்பிகளை வீசி பெண் உள்பட இருவா் தாக்குதல் நடத்தினா். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு!

பாபநாசம் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை!

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

SCROLL FOR NEXT