விமான நிலையத்தில் பரிசோதனை கருவிகள் பொருத்தக் காலக்கெடு நீட்டிப்பு
தில்லி உள்பட விமான நிலையங்களில் பரிசோதனை கருவிகள் பொருத்துவதற்கான காலக்கெடு டிச.31-ல் முடிவடையவிருப்பதைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
புது தில்லி: தில்லி விமான நிலையத்தில் முழு உடல் சோதனை கருவிகள் (ஸ்கேனர்கள்) 2024 மே மாதத்துக்குள் அமைக்கப்படும் என மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
சிவில் விமான பாதுகாப்பு பணியக இயக்குநர் ஜெனரல் ஜுல்பிகர் ஹாசன், உள்ளமைப்பு சிக்கல்களால் முழு உடல் பரிசோதனை கருவிகள் மற்றும் சிடிஎக்ஸ் ஸ்கேனர்களை விமான நிலையங்களில் அமைக்கும் காலக் கெடு நீடிக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
இவற்றை அமைப்பதற்கான காலக்கெடு டிச.31-ல் முடிவடைகிறது.
கணினி தளக்கதிர் படவியல் (டோமோகிராபி எக்ஸ்-ரே) தொழில்நுட்பக் கருவி (சிடிஎக்ஸ்) பயன்பாட்டில், விமான நிலையச் சோதனைகளில் பயணிகள் தங்கள் பைகளில் உள்ல எலெக்ட்ரானிக் பொருள்களை வெளியே எடுக்க வேண்டிய அவசியமிருக்காது.
இதையும் படிக்க: ஜெய்ப்பூர் வந்தடைந்தார் ராஜ்நாத் சிங்!
அதிநவீன தொழில்நுட்பத்தில் இயங்கும் இவை தில்லி உள்பட நாட்டின் பல்வேறு விமான நிலையங்களில் அமைக்கப்படவுள்ளன.