காணாமல் போனவரின் உடல் கழிவுநீர் கால்வாயில் மீட்பு!
நான்கு நாள்களுக்கு முன்பு காணாமல் போனவர் குறித்து காவல்துறையில் இரண்டு நாள்களுக்கு முன்புதான் புகார் அளிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
சஹாரன்பூர்: நான்கு நாள்களுக்கு முன்பு காணாமல் போன 32 வயதான நபரின் உடல், கழிவுநீர் கால்வாயில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக உத்தர பிரதேச காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இறப்பிற்கான காரணம், உடற்கூராய்வுக்குப் பிறகு தெரிய வரும் எனவும் உடற்கூராய்வுக்கு உடல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக காவல் கண்காணிப்பாளர் சாகர் ஜெயின் பேசும்போது, ஆனந்த் நகரைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் நான்கு நாள்களுக்கு முன்பு காணாமல் போனதாகத் தெரிவித்துள்ளார்.
Advertisement
அவரது வீட்டினர், ராஜ்குமார் திரும்பி வந்துவிடுவார் என்று இரண்டு நாள்கள் காத்திருருந்த பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதையும் படிக்க: வைரல் விடியோ: மாமியாரைத் தாக்கிய மருமகள் கைது!
குதுப்ஷர் சரக காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் பகுதியில் ராஜ்குமாரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.