இந்தியா

விஜய் திவஸ்: போர் நினைவிடத்தில் ராஜ்நாத் சிங் மரியாதை!

விஜய் திவஸ் தினத்தையொட்டி, போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு தில்லியில் உள்ள போர் நினைவிடத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தலைமை தளபதி அனில் சௌஹான் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். 

DIN

விஜய் திவஸ் தினத்தையொட்டி, போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு தில்லியில் உள்ள போர் நினைவிடத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தலைமை தளபதி அனில் சௌஹான் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். 

இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாகிஸ்தான் வீரா்கள் இந்திய படைகளிடம் சரணடைந்தனா். இந்தப் போரில் இந்தியா வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 16 ஆம் தேதி ‘விஜய் திவஸ்’ கொண்டாடப்படுகிறது. இந்த போரின் மூலம் பாகிஸ்தானிடம் இருந்து அப்போதைய கிழக்கு பாகிஸ்தானுக்கு (வங்கதேசம்) இந்தியா விடுதலை பெற்று தந்தது.

இந்நிலையில், போரில் இந்தியா வெற்றி பெற்ற தினத்தையொட்டி, போரில் உயிா்நீத்த வீரா்களுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தலைமை தளபதி அனில் சௌஹான், ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, கடற்படைத் தளபதி ஆர். ஹரி குமார், இந்திய விமானப்படையின் துணைத் தளபதி ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் ஆகியோர் தில்லியில் உள்ள போர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி-யாக நியமனம்!

புகையிலை இல்லா சமுதாயம் உருவாக்க உறுதிமொழி ஏற்பு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை!

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

SCROLL FOR NEXT