இந்தியா

மிக்ஜம் புயல்: ஒரு மாத ஊதியத்தை நிவாரணமாக வழங்கிய திமுக எம்.பி.க்கள்!

மிக்ஜம் புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள 30 திமுக மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியத்தை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர். 

DIN

மிக்ஜம் புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள 30 திமுக மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியத்தை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர். 

மிக்ஜம் புயலால் கடந்த டிசம்பர் 2-4 வரை சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த மழை 47 ஆண்டு வரலாற்றில் இல்லாத அளவிலான பெருமழை. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பெரும் பாதிப்புக்குள்ளானது. 

இந்த சூழலில் புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். 

மேலும், அவர் தன்னுடைய ஒரு மாத ஊதியத்தையும் வழங்கியுள்ளார். இந்த நிலையில், திமுக எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அனைவரும் தங்கள் ஒரு மாத ஊதியத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்தனர். 

அதன்படி, திமுக மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் இன்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தங்கள் ஒரு மாத ஊதியத்துக்கான காசோலையை வழங்கினார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு!

இந்தியாவுடன் தீவிர வர்த்தகப் பேச்சு - வெள்ளை மாளிகை தகவல்

என்னை யாரும் இயக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

SCROLL FOR NEXT