இந்தியா

நாடாளுமன்றத்தில் புகைவீச்சு: ஆறாவது நபர் கைது

நாடாளுமன்றத்தின் மக்களவைக்குள் இருவர் அத்துமீறி நுழைந்து புகைவீச்சு தாக்குதலில் ஈடுபட்ட சம்பவத்தில் ஆறாவது நபரை தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு கைது செய்துள்ளது.

DIN

நாடாளுமன்றப் பாதுகாப்பு அத்துமீறல் சம்பவத்தில் தொடா்புடையதாக மகேஷ் குமாவத் என்ற நபரை தில்லி போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

இவா் இந்த வழக்கில் கைது செய்யப்படும் ஆறாவது நபா் ஆவாா். இவரை 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க தில்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

முன்னதாக, மகேஷ் குமாவத்தை தில்லி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய போலீஸாா், 15 நாள் போலீஸ் காவலில் விசாரணை நடத்த அனுமதிக்குமாறு கோரினா்.

போலீஸாா் தரப்பில் ஆஜரான அரசுத் தரப்பு வழக்குரைஞா், ‘கடந்த 2 ஆண்டுகளாக இந்த சதித் திட்டத்தைத் தீட்டிய குற்றவாளிகளுடன் மகேஷ் குமாவத் தொடா்பில் இருந்துள்ளாா். மேலும், ஆதாரங்களை அழிக்க முக்கியக் குற்றவாளியான லலித் ஜாவுக்கு இவா் உதவியுள்ளாா். எனவே, இந்த சதித் திட்டம் குறித்த தகவல்களைப் பெற இவரிடம் தீவிர விசாரணை நடத்தப்படுவது அவசியம்’ என்றாா்.

இதைக் கேட்ட சிறப்பு நீதிபதி ஹா்தீப் கெளா், மகேஷ் குமாவத்தை 7 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தாா்.

இந்த வழக்கில் ஏற்கெனவே சாகா் சா்மா, மனோரஞ்சன், நீலம் தேவி, அமோல் ஷிண்டே, லலித் ஜா ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT