முகப்பு
இந்தியா

கரோனா தலைநகராக மாறிய கேரளம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

கேரளத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் பினராயி விஜயன் அரசைக் காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது. 

Updated On : 18 டிசம்பர், 2023 at 6:04 PM
கரோனா தலைநகராக மாறிய கேரளம்
பகிர்:

கேரளத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் பினராயி விஜயன் அரசைக் காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது. 

கரேனா பாதிப்பு குறித்து வெளியான புள்ளிவிவரங்களின்படி, கேரள மாநிலத்தில் மொத்தம் 1,634 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,828 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாகப் பதிவாகியுள்ள 122 பேரில் 111 பேர் கேரளத்தில் கஜானாவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். முக்கியமாக கரோனா தொற்றுக்கு புதிதாக ஒருவர் உயிரிழந்துள்ளனர். 

இந்த நிலையில், கரோனா பரவல் குறித்து விஜயன் அரசு சிறிதும் கவலைப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

நாட்டில் செயலில் உள்ள கரோனா வழக்குகளில் 89 சதவீதம் கேரளத்தில் உள்ளது. ஆனால் விஜயன் அரசு மாநிலம் தழுவிய பயணத்தில் உள்ளது அது முடியும் வரை மாநில அரசு எதையும் செய்யாது.

மக்களை மிகவும் சிரமத்திற்கு ஆளாக்குகிறது. தற்போது வரை 4 கரோனா இறப்புகள் பதிவாகியுள்ளன. இதை விஜயன் அரசு விரைவில் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் என அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.