அரவிந்த் கேஜரிவாலுக்கு மீண்டும் சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை!
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு மீண்டும் புதிதாக அழைப்பாணை அனுப்பியுள்ளது அமலாக்கத்துறை
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு அமலாக்கத்துறை மீண்டும் புதிதாக அழைப்பாணை அனுப்பியுள்ளது.
தில்லி அரசின் கலால் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் விசாரணை நடத்துவதற்கு டிசம்பர் 21-ஆம் தேதி ஆஜராகுமாறு தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கேஜரிவாலுக்கு அமலாக்கத்துறை திங்கள்கிழமை சம்மன் அனுப்பியுள்ளது.
இதையும் படிக்க | ஞானவாபி மசூதி விவகாரம்: ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது தொல்லியல் துறை!
Advertisement
Advertisement
முன்னதாக, நவம்பர் 2-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை அனுப்பிய அழைப்பாணை தெளிவற்றதாகவும், அரசியல் உள்நோக்கத்தோடு இருந்ததாகவும் கூறி விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்தார் அரவிந்த் கேஜரிவால்.
அதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை தற்போது மீண்டும் புதிதாக அழைப்பாணை அனுப்பியுள்ளது.
தில்லி அரசின் கலால் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் ஏற்கனவே துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க | பிரதமர் மோடியின் செயல் நாடாளுமன்றத்திற்கே அவமானம்: கபில் சிபல்
இதே வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் மத்திய புலனாய்வு அமைப்பு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை அழைத்து விசாரணை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.