சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (இடது) மற்றும் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் (வலது) | EPS 
இந்தியா

ஆளுநர் பதவிக்கு தகுதியற்றவர் ஆரிஃப் முகமது கான்: சிபிஎம்

கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் ஆளுநர் பதவிக்கு தகுதியற்றவர் என சிபிஎம் அரசியல் தலைமைக்குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

DIN

கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் ஆளுநர் பதவிக்கு தகுதியற்றவர் என சிபிஎம் அரசியல் தலைமைக்குழு (பொலிட் பீரோ) தெரிவித்துள்ளது. கவர்னர் எல்லை மீறி செயல்படுவதும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் மீது அரசியல் தாக்குதல்களைத் தொடர்வதும், அவரது ஒழுங்கற்ற நடத்தைகளும் கண்டிக்கத்தக்கவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அரசியல் தலைமைக்குழு வெளியிட்ட அறிக்கையில், ஆளுநர் கேரளத்தில் அரசியல் ஒழுங்கு சீர்குலைந்து வருவாதாக அவர் கூறியதற்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். மாநில அரசின் மீது வைக்கப்படும் இதுபோன்ற தவறான குற்றச்சாட்டுகளை மக்கள் ஏற்க மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆரிஃப் கான் கல்லூரி வேந்தராக இருக்கும் கேரள மற்றும் கோழிக்கோடு பல்கலைகழகங்களின் பரிந்துரைக்கப்பட்ட இடங்களில், ஆர்எஸ்எஸ் நபர்களை நியமித்ததே மாணவர்கள் போராட்டத்திற்குக் காரணம் எனவும் சிபிஎம் குற்றம் சாட்டியுள்ளது. 

மேலும், 'தனது பதிவியை தவறாக பயன்படுத்தி மாணவர்களைப் போராட்டத்திற்கு தூண்டிவிட்டது ஆளுநர்தான். அமைதியாக போராட்டத்தில் ஈடுபடுவது மாணவர்களின் ஜனநாயக உரிமை, அதற்கு முதல்வரின் மேல் பழி சொல்லி தன்னைத் தானே ஆளுநர் அவமதித்துள்ளார்'  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கிடையே கிரிக்கெட்: பதிவு செய்ய நவ.10 கடைசி

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT