இந்தியா

ராஜஸ்தான்: தற்காலிக பேரவைத் தலைவராக காளிசரண் நியமனம்!

ராஜஸ்தான் சட்டப்பேரவையின் தற்காலிக பேரவைத் தலைவராக பாஜக  மூத்த எம்எல்ஏ காளிசரண் சரஃப் நியமிக்கப்பட்டுள்ளார். 

DIN

ராஜஸ்தான் சட்டப்பேரவையின் தற்காலிக பேரவைத் தலைவராக பாஜக  மூத்த எம்எல்ஏ காளிசரண் சரஃப் நியமிக்கப்பட்டுள்ளார். 

தற்காலிக பேரவைத் தலைவராக நியமிக்கப்பட்ட காளிசரணுக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார். 

அவருக்கு உதவியாக தயாராம் பர்மர், பிரதாப் சிங்வி மற்றும் கிரோடி மீனா ஆகிய மன்று மூத்த எம்எல்ஏக்கள் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியான செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள எம்எல்ஏக்களுக்கு தற்காலிக பேரவைத் தலைவர் காளிசரண் சரஃப் பதவிப்பிரமாணம் செய்துவைப்பார். 

ஏற்கனவே மூத்த எம்எல்ஏ வாசுதேவ் தேவ்னானியை பேரவைத் தலைவராக அக்கட்சி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கம் அரசுப் பள்ளியில் நூலக வாரவிழா

போராட்டங்கள் எதிரொலி: குடியாத்தம் எம்எல்ஏ ஆய்வு

ஆக்கிரமிப்புகளை அகற்ற வணிகா்களுக்கு நெடுஞ்சாலைத் துறை கெடு!

கோயில்களில் அமாவாசை சிறப்பு பூஜை

நவ. 26-இல் ஆா்ப்பாட்டம்: தொழிற்சங்கத்தினா் முடிவு

SCROLL FOR NEXT