கோப்புப்படம் 
இந்தியா

பிரதமரை சந்திக்கவுள்ள சித்தராமையா; காரணம் என்ன?

பிரதமர் நரேந்திர மோடியை செவ்வாய்க்கிழமை புதுதில்லியில் சந்திக்க உள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

DIN

பிரதமர் நரேந்திர மோடியை செவ்வாய்க்கிழமை புதுதில்லியில் சந்திக்க உள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி குறித்து எடுத்துரைத்து, மத்திய அரசின் நிவாரண நிதியை வலியுறுத்திப் பெறுவதற்காக கர்நாடக முதல்வர் சித்தராமையா செவ்வாய்க்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேச உள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, “பிரதமரை சந்திப்பதற்கு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு நேரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே நாளை புதுதில்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து வறட்சி குறித்து பேச உள்ளேன். 

மேலும் தில்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதிலும் பங்கேற்க உள்ளேன். நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு தயாராவது குறித்து விவாதிக்க உள்ளோம்.” என்று தெரிவித்தார்.

கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி குறித்து பல முறை மத்திய அரசிடம் வலியுறுத்தி, மத்திய அரசின் குழு நேரில் வந்து பார்வையிட்ட பின்பும் இதுவரை நிவாரண நிதியை விடுவிக்காதது குறித்து பாஜக அரசை சித்தராமையா கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.

கர்நாடகத்தில் உள்ள 236 தாலுகாக்களில் 223 தாலுகா வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திண்டுக்கல் மாமன்ற உறுப்பினருக்கு எதிரான நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை!

நாளைய மின்தடை

இலவச வீட்டு மனைப் பட்டா ஒதுக்கீட்டில் முறைகேடு புகாா்: கட்சியினா் ஆா்ப்பாட்டம்!

சிவகங்கை மாவட்டத்துக்கு இன்று ஸ்டாலின் வருகை!

ரூபாய் மதிப்பு குறைந்தால் தங்கத்தின் விலை அதிகரிக்கும்: ப.சிதம்பரம்

SCROLL FOR NEXT