கை கூப்பி வணங்காத தலித் முதியவருக்கு 3 மணிநேரம் அடி உதை!
மத்தியப் பிரதேசத்தில் கை கூப்பி வணங்கிடாத முதியவரை கட்டி வைத்து 3 மணி நேரம் துன்புறுத்தியவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
மத்திய பிரதேசத்தில் கை கூம்பி வணங்காத தலித் முதியவரை உயர் சாதியினர் கட்டி வைத்து 3 மணி நேரம் அடித்துத் துன்புறுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது. உடைப்பிரா கிராமத்தைச் சேர்ந்த நேதுரம் அஹிர்வார் எனும் முதியவர் இந்த தீண்டாமைக் குற்றத்திற்கு ஆளாகியுள்ளார்.
நியாய விலைக் கடைக்கு சென்று திரும்பிய முதியவரை வழி மறைத்த இரண்டு உயர் சாதியினர் அவரைக் கட்டி வைத்து 3 மணிநேரம் அடித்ததில் அவர் நடக்கும் திறனை தற்காலிகமாக இழந்துள்ளாதக் கூறப்படுகிறது. அவரை சாதி பெயரைச் சொல்லியும் தகாத வார்த்தைகளால் திட்டியதாக பாதிக்கப்பட்ட முதியவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: தேசிய பேரிடர் நிவாரண நிதி வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்
Advertisement
Advertisement
முதியவரின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இரண்டு குற்றவாளிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளைத் தேடி வருவதாகவும் துணை ஆய்வாளர் மார்கண்டே மிஷ்ரா தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.