இந்தியா

ம.பி. பேரவைத் தலைவராக நரேந்திர சிங் தோமர் தேர்வு!

மத்தியப் பிரதேசத்தின் சட்டப் பேரவையின் தலைவராக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான நரேந்திர சிங் தோமர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

DIN

மத்தியப் பிரதேசத்தின் சட்டப் பேரவையின் தலைவராக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான நரேந்திர சிங் தோமர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கியது. 

முதல்வர் மோகன் யாதவ் தோமரை பேரவைத் தலைவராக தேர்ந்தெடுப்பதற்கான முன்மொழிவை எதிர்க்கட்சித் தலைவர் உமங் சிங்கார் முன்மொழிந்தார். 

எதிர்க்கட்சி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அஜய் சிங், ஜெய்வர்தன் சிங் மற்றும் ராஜேந்திர குமார் சிங் உள்பட மேலும் 5 முன்மொழிவுகளும் தோமருக்கு ஆதரவாக முன்வைக்கப்பட்டன.

குரல் வாக்கெடுப்புக்குப் பிறகு, தற்காலிக பேரவைத் தலைவராக கோபால் பார்கவாவும், பேரவைத் தலைவர் பதவிக்கு தோமரும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆதரவுடன் சபாநாயகர் பதவிக்கு தோமர் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

முதல்வர் மோகன் யாதவ் தோமருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, பேரவைத் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுத்ததற்கு எதிர்க்கட்சிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT