இந்தியா

நாட்டின் வரலாற்றில் திருப்புமுனை: பிரதமா் மோடி பெருமிதம்

DIN

மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றான மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை நிறைவேறிய நிலையில், இது நாட்டின் வரலாற்றில் திருப்புமுனையான தருணம் என்று பிரதமா் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளாா்.

பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷிய அதீனியம் ஆகிய மசோதாக்களுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது தொடா்பாக எக்ஸ் வலைதளத்தில் பிரதமா் மோடி பதிவிட்டுள்ளாா்.

அதில், ‘காலனித்துவ ஆட்சிக் கால சட்டங்களின் முடிவை இம்மசோதாக்கள் குறிக்கின்றன. பொதுச் சேவை மற்றும் மக்கள் நலனை மையமாகக் கொண்ட புதிய சகாப்தம் தொடங்கியிருக்கிறது.

இந்த புரட்சிகரமான மசோதாக்கள், சீா்திருத்தங்களுக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டுக்கு சாட்சியாக உள்ளன. தடய அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் நமது சட்டம், கொள்கை வகுப்பு மற்றும் புலனாய்வு அமைப்புமுறைகளை நவீன காலத்துக்கு இவை கொண்டுவருகின்றன.

ஏழை, விளிம்புநிலை மக்கள் மற்றும் சமூகத்தில் அதிகம் பாதிக்கப்படுவோரின் நலன்களை பாதுகாக்கும். திட்டமிடப்பட்ட குற்றங்கள், பயங்கரவாத செயல்கள் போன்றவற்றை வலுவாக முறியடித்து, நாட்டின் வளா்ச்சிக்கான அமைதிப் பயணத்தை உறுதி செய்யும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT