பிரதமர் மோடியுடன் தேவகௌடா, குமாரசாமி சந்திப்பு 
இந்தியா

பிரதமர் மோடியுடன் தேவகௌடா, குமாரசாமி சந்திப்பு!

முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான எச்.டி.தேவகௌடா பிரதமர் மோடியை சந்தித்தார். 

DIN

முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவருமான எச்.டி.தேவகௌடா பிரதமர் மோடியை சந்தித்தார். 

தேவகௌடாவின் இரண்டு மகன்கள், கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி மற்றும் எம்எல்ஏ எச்.டி.ரேவண்ணா, ஹாசன் எம்பியான பேரன் பிரஜ்வல் ரேவண்ணா ஆகியோர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.

முன்னாள் பிரதமர் தேவகௌடாவை சந்தித்ததில் மகிழ்ச்சி என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

தேசத்தின் முன்னேற்றத்திற்கு தேவகௌடாவின் முன்மாதிரியான பங்களிப்பை இந்தியா பெரிதும் மதிக்கிறது. பல்வேறு கொள்கை விஷயங்களில் அவரது எண்ணங்கள் எதிர்காலத்தைச் சார்ந்தவை என்றும் அவர் பதிவிட்டுள்ளார். 

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கர்நாடகத்தில் பாஜகவும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி அமைத்துக்கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

SCROLL FOR NEXT