இந்தியா

எம்.பி.க்கள் இடைநீக்கத்தைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டம்!

DIN

நாடாளுமன்றப் பாதுகாப்பு அத்துமீறல் தொடர்பாக எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

143 எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் இருந்து விஜய் சௌக்கிற்கு பேரணியாகச் சென்றனர். 

இந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர் நாடாளுமன்றத்தில் சாதிவெறியைக் கொண்டு வருவதாகும். 

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் நாடாளுமன்றத்துக்கு வெளியே பேசியது அவையின் சிறப்புரிமையை மீறிய செயல்.

இது ஏன் நடந்தது, யார் பொறுப்பு என்பது குறித்து நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் பிரச்னையை எழுப்ப விரும்புகிறோம்.

எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் பேச விரும்பின, ஆனால் பிரதமரும், உள்துறை அமைச்சரும் வரவில்லை, பிரதமர் மற்ற இடங்களில் தொடர்ந்து உரையாற்றிய வருவதாகவும் கார்கே குற்றம் சாட்டினார். 

எம்.பி.க்கள் இடைநீக்கத்துக்கு எதிராக வெள்ளிக்கிழமை ஜந்தர் மந்தரில் இந்தியா கூட்டணி தலைவர்கள் போராட்டம் நடத்துவார்கள். மேலும் இந்த அரசாங்கத்தின் ஒழுக்கக்கேடான மற்றும் சட்டவிரோதமான நடத்தைக்கு எதிராக அனைத்து மாவட்ட தலைமையகங்களிலும் நாடு தழுவிய போராட்டங்கள் நடத்தப்படும் என்று அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிரிப்பில் ஒளிரும் மிருணாள் தாக்குர்!

சர்ச்சைக்குள்ளாகும் நிகிலா விமலின் கருத்து! அப்படி என்ன கூறினார்?

'எங்கள் விவாகரத்துக்கு யாரும் காரணமில்லை’: சைந்தவி

சைகை மொழியில் டி20 வர்ணனை: டிஸ்னி ஸ்டார் அறிவிப்பு!

சிதறடிக்கும் ஷ்ரேயாஸ் ஐயர்!

SCROLL FOR NEXT