இந்தியா

இஸ்லாமாபாத், ராவல்பிண்டியில் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

DIN

பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத், ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இதுதொடர்பாக புவியியல் ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில், 

பாகிஸ்தானில் இன்று காலை 5.30 மணியளவில் ரிக்டர் அளவில் 4.4 அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 

ராவல்பிண்டியை மையமாகக் கொண்டு 16 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். 

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் இதுவரை வெளியிடவில்லை. 

கடந்த மாதம் 3.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று மீண்டும் நிலஅதிர்வு ஏற்பட்டது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஏஏ என்பது வெறும் கண்துடைப்பு: மம்தா பானர்ஜி!

மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி பாடல் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா? மின் வாரியம் விளக்கம்

கார்கிவ்வை கைப்பற்றும் எண்ணமில்லை: ரஷிய பிரதமர்!

உலகக் கோப்பை நேரத்தில் பாகிஸ்தான் அணிக்குள் அதிருப்தி நிலவுகிறதா? ஷகின் அஃப்ரிடி பதில்!

SCROLL FOR NEXT