இந்தியா

கா்நாடகத்தில் இன்றுமுதல் ‘ஹிஜாப்’ அணிவதற்கான தடை நீக்கம்

கா்நாடகத்தில் கல்வி நிலையங்களில் ‘ஹிஜாப்’ அணிவதற்கான தடை சனிக்கிழமை (டிச.23) முதல் நீக்கப்படுவதாக மாநில முதல்வா் சித்தராமையா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

DIN

கா்நாடகத்தில் கல்வி நிலையங்களில் ‘ஹிஜாப்’ அணிவதற்கான தடை சனிக்கிழமை (டிச.23) முதல் நீக்கப்படுவதாக மாநில முதல்வா் சித்தராமையா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

கா்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட 3 காவல் நிலையங்களின் திறப்பு விழாவில் அவா் பேசுகையில், ‘அனைவருக்குமான அரசு எனக் கூறும் பாஜக தலையில் தொப்பி அணிவதற்கு, ஹிஜாப் அணிவதற்குத் தடை விதிக்கிறது. இதுதான் அனைவருக்குமான அரசா?’ என்றாா்.

அப்போது நிகழ்ச்சி நடைபெறும் கூட்டத்தில் இருந்த ஒருவா் மாநிலத்தில் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடை குறித்து சித்தராமையாவிடம் கேட்டாா்.

அதற்கு பதிலளித்த முதல்வா், ‘ஹிஜாப் அணிவதற்குத் தடை இல்லை. சனிக்கிழமை முதல் நீங்கள் ஹிஜாப் அணியலாம். பிடித்த உணவை உட்கொள்ளலாம். பிடித்த ஆடைகளை அணியலாம். ஜாதி மதவேறுபாடின்றி காங்கிரஸ் அரசு செயல்படுகிறது’ என்றாா்.

கா்நாடகத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு பாஜக ஆட்சி செய்தபோது கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவிகிதமாக தொடரும்: ரிசர்வ் வங்கி

சீனாவில் கனமழையால் நிலச்சரிவு! 7 பேர் மாயம்..மக்கள் வெளியேற்றம்!

வெள்ளத்தால் உருக்குலைந்த கிராமம்! கழுகுப்பார்வை காட்சிகள்! | Uttarakhand | Cloud Burst

சிவகார்த்திகேயன் குரலில் ஓ காட் ஃபியூட்டிஃபுல் பாடல்!

இந்தியாவுக்கு மேலும் 25%... மொத்தம் 50% வரி: டிரம்ப்

SCROLL FOR NEXT