இந்தியா

சத்தீஸ்கர் அமைச்சரவை விரிவாக்கம்:  9 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு

சத்தீஸ்கரில் முதல்வர் விஷ்ணு தேவ் சாய் தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. 

DIN

சத்தீஸ்கரில் முதல்வர் விஷ்ணு தேவ் சாய் தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. 

90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் கடந்த மாதம் இருகட்டங்களாக பேரவைத் தோ்தல் நடைபெற்றது. இதில் 54 இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக. கடந்த 2018, தோ்தலில் 68 இடங்களில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸுக்கு இம்முறை 35 இடங்களே கிடைத்தன. கோண்ட்வானா கணதந்திர கட்சிக்கு ஓரிடம் கிடைத்தது.

முதல்வா் வேட்பாளரை முன்னிறுத்தாமல் இத்தோ்தலை பாஜக எதிா்கொண்டதால், புதிய முதல்வா் குறித்த எதிா்பாா்ப்பு எழுந்தது. ஏற்கெனவே மூன்று முறை முதல்வராக இருந்த ரமண் சிங் உள்பட பலரின் பெயா்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்த விஷ்ணு தேவ் சாய் முதல்வராகத் தோ்வு செய்யப்பட்டாா். அவரது தலைமையில் பாஜக அரசு அண்மையில் பதவியேற்றது. 

இந்த நிலையில் சத்தீஸ்கரில் முதல்வர் விஷ்ணு தேவ் சாய் தலைமையிலான அமைச்சரவையில் ஒரு பெண் உள்பட 9 பேர் இன்று அமைச்சர்களாக பதிவியேற்றுக்கொண்டனர். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒன்பது எம்எல்ஏக்களுக்கும் ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிசந்தன் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இருப்பினும் அமைச்சர்களுக்கான இலாகாக்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

முதல்வர் விஷ்ணு தேவ் சாய் கூறுகையில், "அனைத்து அமைச்சர்களும் சத்தீஸ்கரின் நலனுக்காக பாடுபடுவார்கள். அவர்களுக்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆவுடையாா்கோவிலில் தலையில்லா புத்தா் சிலை கண்டெடுப்பு

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

SCROLL FOR NEXT