இந்தியா

பாதுகாப்பு அத்துமீறல்: சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டவரின் காவல் நீடிப்பு

DIN

புது தில்லி: நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் தொடர்பான வழக்கில் சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டவரின் நீதிமன்ற காவலை ஜன. 5 வரை நீடித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறப்பு நீதிபதி ஹர்தீப் கவுர், இந்தத் திட்டத்தின் மூளையாகச் செயல்பட்ட லலித் ஜாவை விசாரிக்கத் தில்லி காவல்துறை அவகாசம் கேட்டு அளித்த கோரிக்கையை ஏற்று காவலை நீடித்துள்ளார்.

லலித் ஜா, இந்த விவகாரத்தில் மூளையாகச் செயல்பட்டதாகவும் ஒட்டுமொத்த சதி குறித்தும் விசாரிக்க வேண்டும் எனவும் காவலர்கள் கூறினர்.

முன்னதாக, வியாழக்கிழமை நீதிமன்றம், இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நால்வரின் காவலை ஜன.5 வரை நீடித்து உத்தரவிட்டது.

2001 பாதுகாப்பு அத்துமீறல் நிகழ்ந்த அதே நாளில்  சாகர் சர்மா மற்றும் மனோரஞ்சன் ஆகிய இருவர் பார்வையாளர் பகுதியில் இருந்து அவைக்குள் அத்துமீறி நுழைந்து வண்ணக்குப்பிகளை வீசினர்.

அதே நேரத்தில் அமோல் ஷிண்டே மற்றும் நீலம் இருவரும் நாடாளுமன்றத்துக்கு வெளியே புகையை உமிழும் குப்பிகளை வீசி போராட்டத்தில் ஈடுபட்டது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னுகிறதா கவின் நடித்த ஸ்டார்? - திரைவிமர்சனம்

10ம் வகுப்பு: மறுதேர்வு, மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பம் எப்போது?

10ம் வகுப்பு தேர்வு முடிவு: 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள்

10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள்: அரியலூர் முதலிடம்.... முதல் 5 மாவட்டங்கள்!

கணக்கில் கலக்கிய புலிகள்: சதமடித்து சாதித்த மாணவர்கள்!

SCROLL FOR NEXT