முகப்பு
இந்தியா

தமிழகத்துக்கு ரூ.900 கோடியை வழங்கிய மத்திய அரசு: நிர்மலா சீதாராமன் தகவல்

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய பேரிடர் நிதி ரூ.900 கோடியை மத்திய அரசு வழங்கிவிட்டது என்று நிர்மலா சீதாராமன் தகவல்

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:30 PM
பகிர்:

புது தில்லி: நெல்லை மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்க மத்திய அரசு என்ன செய்தது என்பது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், இந்த ஆண்டு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய பேரிடர் நிதி ரூ.900 கோடியை மத்திய அரசு வழங்கிவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், தென் மாவட்டங்களில் வெள்ளம் வடிவதற்கு முன்பாகவே, பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் இறங்கினர்.

இந்திய ராணுவத்தின் 9 ஹெலிகாப்டர்கள் மூலம் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. விமானப்படை, கடற்படை மூலமும் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்றன. நெல்லை மற்றும் தூத்துக்குடியில், வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 42 ஆயிரம் பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.

தென் மாவட்ட மழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர்.  ஒட்டுமொத்தமாக வெள்ளத்தில் சிக்கிய 42,290 பேர் மீட்கப்பட்டுள்ளனர். களப்பணிகள் விரைந்து நடைபெற்றதால், அதிகமான மக்கள் மீட்கப்பட்டனர் என்றும் அவர் தெரிவித்துளள்ர்.

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிய 800க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க மத்தியப் படையினர் விரைந்து செயல்பட்டனர். தேசிய பேரிடர் மீட்புப் படை, கடலோர காவல் படை மூலம் ஏராளமானோர் மீட்கப்பட்டுள்ளனர்.

4 தென் மாவட்டங்களுக்கும் உடனடியாக உதவும்படி நான் வைத்தக் கோரிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாக உதவிகளை அளித்தார்.

மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டிய இரண்டாவது தவணை டிசம்பர் 12ஆம் தேதியே அதாவது முன்கூட்டியே வழங்கப்பட்டுவிட்டது. தென் மாவட்டங்களில் மழை, வெள்ள பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பே, மத்திய அரசு, நிலுவைத் தொகையை வழங்கிவிட்டது.  அதாவது, இந்த ஆண்டு மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.900 கோடியையும் தமிழகத்துக்கு வழங்கப்பட்டுவிட்டது என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →