எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட பிறகான அவை | PTI 
இந்தியா

எம்.பிக்கள் இடைநீக்க விவகாரம்: பாதுகாப்பு தீவிரம்!

இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதால் நாடாளுமன்றம் மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாட்டுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

DIN

புதுதில்லி: நாடாளுமன்றம் மற்றும் ஜந்தர் மந்தர் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டிச.14 முதல் நாடாளுமன்றத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பிக்கள் போராட்டம், வெள்ளிக்கிழமை ஜந்தர் மந்தரில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாதுகாப்பு அதிகாரிகள் போதிய அளவில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் சாலை தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அந்தப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க வேண்டிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

146 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் மல்லிகார்ஜுன கார்கே, அரசின் சட்ட விரோதமான இந்த நடவடிக்கையை எதிர்த்து வெள்ளிக்கிழமை போராட்டம் மேற்கொள்ளவுள்ளதாக வியாழக்கிழமை அறிவித்தார்.

டிச.13  அன்று நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு அத்துமீறலைத் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 9

“வண்டிய நிறுத்துங்க..!” மதுபோதையில் அரசுப் பேருந்து ஓட்டுநர்! பயணிகள் சாலை மறியல்!

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 8

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 7

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 6

SCROLL FOR NEXT