இந்தியா

ஜம்முவில் ஊடுருவல் முறியடிப்பு; உடலை இழுத்துச் சென்ற பயங்கரவாதிகள்

PTI


புது தில்லி: ஜம்மு காஷ்மீரின் அக்நூர் செக்டார் அருகே, கௌர் பகுதியில் இன்று அதிகாலை நடந்த ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது.

இது குறித்து ராணுவ அதிகாரிகள் கூறுகையில், பயங்கர ஆயுதங்களுடன் நான்கு பேர் ஊடுருவ முயற்சி செய்வதை கண்காணிப்புக் குழுவினர் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இதில், ஒரு பயங்கரவாதி படுகாயமடைந்தார். ஆனால் உடனடியாக மற்ற பயங்கரவாதிகள், அந்த நபரின் உடலை இழுத்துக்கொண்டு எல்லையைவிட்டு ஓடியதை, எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் கண்டறிந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூஞ்ச் மாவட்டத்தில் தாக்குதல்
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் வியாழக்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரா்கள் உயிரிழந்த நிலையில், சம்பவ இடத்தையொட்டிய வனப் பகுதிகளில் தேடுதல் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

அதேபோல், தாக்குதல் நடைபெற்ற சூரன்கோட் பகுதிக்கு வெள்ளிக்கிழமை வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் குழு விசாரணையைத் தொடங்கினா்.

பூஞ்ச் மாவட்டத்தின் புஃப்லியாஸ் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின்பேரில் ராணுவ வீரா்கள் புதன்கிழமை இரவிலிருந்து அங்கு தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனா்.

தேடுதல் பணி நடைபெற்ற இடத்துக்கு செல்ல ராணுவ வீரா்கள் பயணித்த லாரி மற்றும் ஜீப் மீது பயங்கரவாதிகள் மறைந்திருந்து தாக்குதல் நடத்தினா். தாத்யாா் மோா் மற்றும் தேரா கி கலி-புஃப்லியாஸ் பகுதிகளுக்கு இடையே கடந்த வியாழக்கிழமை மாலை 3.45 மணியளவில் நடந்த இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சோ்ந்த லஷ்கா்-ஏ-தொய்பாவின் கிளை அமைப்பான மக்கள் பாசிச விரோத அமைப்பு (பிஏஎஃப்எஃப்) பொறுப்பேற்றுள்ளது.

இந்தத் தாக்குதலில் 5 ராணுவ வீரா்கள் கொல்லப்பட்டனா். இருவா் பலத்த காயமடைந்தனா். உயிரிழந்த 2 வீரா்களின் உடல்கள் பயங்கரவாதிகளால் சிதைக்கப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT