தேடுதல் பணியில் ராணுவ வீரர்கள் | கோப்பு 
இந்தியா

பலியான மூவரின் வாரிசுகளுக்கு இழப்பீடு மற்றும் அரசு வேலை!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதலில் பலியான மூவரின் வாரிசுகளுக்கு அரசு இழப்பீடு அறிவித்துள்ளது.

DIN

ஜம்மு- காஷ்மீர் நிர்வாகம், பூஞ்ச் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் மீதான தாக்குதலில் பலியான பொதுமக்கள் மூவரின் வாரிசுகளுக்கு இழப்பீடும் அரசு வேலையும் வழங்குவதாக அறிவித்துள்ளது.

அரசியல் கட்சிகள், ஜம்மு காஷ்மீரில் நடந்த இந்தத் தாக்குதலில் மர்மமான முறையில் பலியானவர்கள், ராணுவத்தால் பயங்கரவாதிகள் குறித்து விசாரிக்க அழைத்துச் செல்லப்பட்டவர்களில் இருந்தனர் எனக் குற்றம் சாட்டியது.

ஜம்மு- காஷ்மீர் செய்தித் தொடர்பு துறை எக்ஸ் வலைதள பக்கத்தில், பூஞ்ச் மாவட்டத்தின் புஃப்லியாஸ் பகுதியில் மூவர் இறந்ததாக தகவல் கிடைத்துள்ளது. மருத்துவ மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் இழப்பீடு, வாரிசுகளுக்கு பணி நியமனம் ஆகிவற்றை அளிக்கவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது

இந்தத் தாக்குதலில் 5 ராணுவ வீரா்கள் கொல்லப்பட்டனா். இருவா் பலத்த காயமடைந்தனா். உயிரிழந்த 2 வீரா்களின் உடல்கள் பயங்கரவாதிகளால் சிதைக்கப்பட்டுள்ளன.

பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகம் உள்ள இந்தப் பகுதிகளில் அடிக்கடி ராணுவ சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுமைப் பெண் திட்டம்! விண்ணப்பிக்க தகுதி என்ன?

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: ஒரு நபர் ஆணையத்தின் விசாரணை நிறுத்திவைப்பு!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் மத்திய அரசு தோளோடு தோள் நிற்கும்: பிரதமர்!

தனுஷை ஏமாற்ற நினைத்தேன்: விஜய் ஆண்டனி

திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் முதல் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை!

SCROLL FOR NEXT