இந்தியா

தேஜஸ்வி யாதவிற்கு மீண்டும் அமலாக்கத்துறை சம்மன்!

DIN

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெறப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் பிகார் துணை முதல்வரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் ஜனவரியில் 5-ல் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை புதிய சம்மன் அனுப்பியுள்ளது. 

முன்னதாக தில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் டிச.22-ஆம் தேதி தேஜஸ்வி யாதவையும், டிச.27-ஆம் தேதி லாலு பிரசாத்தையும் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது. 

ஆனால், தேஜஸ்வி யாதவ் டிச.22-ம் தேதி ஆஜராகாத நிலையில், ஜனவரி 5-ம் தேதி மீண்டும் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 

கடந்த 2004 முதல் 2009-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் பதவி வகித்தார். அப்போது ரயில்வேயின் குரூப்-டி பணிகளில் சிலா் விதிமுறைகளுக்குப் புறம்பாக நியமிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT