முகப்பு
இந்தியா

தெலங்கானாவில் சாலை விபத்து: 5 பேர் பலி!

தெலங்கானா மாநிலம் நாராயண்பேட் மாவட்டத்தில் இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

Updated On : 24 டிசம்பர் 2023, 9:57 pm IST
கோப்புப்படம்
பகிர்:

தெலங்கானா மாநிலம் நாராயண்பேட் மாவட்டத்தில் இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

மக்தால் அருகே நெடுஞ்சாலையில் இன்று மாலை இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. ஒரு கார் மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றதாகவும், அப்போது எதிர் திசையில் வந்த கார் மீது மோதியதாகவும் தெரிகிறது. இதில் ஒரு காரில் 4 பேரும், மற்றொரு காரில் 3 பேரும் இருந்தனர். சம்பவ இடத்தில் 7 பேரில் 5 பேர் பலியாகினர், 2 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.