முகப்பு
இந்தியா

மீண்டும் பரவும் கரோனா?

புதிதாக ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 26 டிசம்பர், 2023 at 3:10 PM
கோப்பு
பகிர்:

புவனேஷ்வர்: புதிதாக கரோனா தொற்று ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒடிசாவில் இதன் உடன் சேர்த்து 3 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.

உறுதி செய்யப்பட்டவர் குர்தா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் மற்ற இருவர் கட்டக் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என சுகாதார இயக்குநர் பிஜய் மோகபத்ரா தெரிவித்துள்ளார்.

”மூவருக்கும் மிதமான அறிகுறிகள் மட்டும் தென்படுகிறது. அவரவர் வீட்டிலேயே சிகிச்சையில் உள்ளனர். உடல்நலம் நிலையாக இருக்கிறது” என அவர் தெரிவித்தார்.

Advertisement

இது ஜே.என்.1 வகையா எனச் சோதிக்க மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மூவரின் பயண விபரங்கள் குறித்து தகவல்களைத் திரட்டி வருகின்றனர் சுகாதார பணியாளர்கள். 

மேலும், நாங்கள் கண்காணிக்கும் அமைப்பைப் பலப்படுத்தி வருகிறோம். கரானோ அறிகுறிகள் தென்பட்டால் கோவிட் பரிசோதனைக்கு அருகில் உள்ள மருத்துவமனிக்குச் செல்லுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.