இந்தியா

வாகன நெரிசல்! ஆற்றில் காரை இயக்கிச் சென்ற சுற்றுலாப் பயணி!

DIN


வாகன நெரிசலைத் தவிர்க்கும் வகையில் சுற்றுலாப் பயணி ஒருவர் ஆற்றில் தனது காரை இறக்கி இயக்கிச் சென்றுள்ளார். ஹிமாசலப் பிரதேசத்தில் மலைப்பாதைகளிடையே வழிந்தோடும் ஆற்றில் இச்சம்பவம் நடந்துள்ளது. 

ஹிமாசலப் பிரதேசத்தின் லாஹுல் பள்ளத்தாக்கில் உள்ளது சன்ரா நதி. இந்த நதியருகே செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்துள்ளது. ஒன்றன்பின் ஒன்றாக வாகனங்கள் செல்லும் அளவிற்கு மட்டுமே சாலை இருந்துள்ளது. 

கடந்த ஞாயிற்றுக்கிழமை லாஹுல் முதல் மணாலி வரையிலான சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்பட்டது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி ஹிமாசலப் பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். 

இதனால், பல்வேறு சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அவ்வாறு லாஹுல் சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில், அருகில் இருந்த ஆற்றில் காரை இறக்கி சுற்றுலாப் பயணி ஒருவர் ஓட்டிச் சென்றுள்ளார். இது தொடர்பான விடியோ சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

மஹிந்திரா நிறுவனத்தின் தார் வகை காரை ஆற்றில் இயக்கிச் சென்றுள்ளதால், அந்த வகை காரை வைத்துள்ள பலரும் அந்த விடியோவில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்மடங்கான டாடா மோட்டாா்ஸ் நிகர லாபம்

இன்று அமோகமான நாள்!

இன்று நல்ல நாள்!

பரோடா வங்கி நிகர லாபம் ரூ.4,886 கோடியாக உயா்வு

மாா்ச்சில் சரிவைக் கண்ட தொழிலக உற்பத்தி

SCROLL FOR NEXT