கோப்புப் படம் 
இந்தியா

தில்லியில் கடும் பனிமூட்டம்: விமான சேவை பாதிப்பு!

கடுமையான பனிமூட்டம் காரணமாக, புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இயக்கப்படும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளன.

DIN

கடுமையான பனிமூட்டம் காரணமாக, புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இயக்கப்படும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

கடுமையான பனிமூட்டம் காரணமாக, புது தில்லி விமான நிலையத்திலிருந்து இன்று காலை முதல் பல்வேறு இடங்களுக்குப் புறப்பட வேண்டிய மற்றும் வரவேண்டிய 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கத்தை விட தில்லியில் கடும் பனிமூட்டம் நிலவி வருகின்றது. நகரின் பல்வேறு பகுதிகளில் காட்சித்திறன் கணிசமாகக் குறைந்துள்ளது. கடும் பனிமூட்டம் நிலவிவருதையடுத்து மக்கள் கவனமுடன் இருக்கவும், நிலைமையை சமாளிக்க தயாராக இருக்கும்படியும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

விமானங்கள் புறப்படும் நேரம் குறித்து, பயணிகள் அந்தந்த விமான சேவை நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு கேட்டறியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தில்லி ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் 22-க்கும் மேற்பட்ட ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் அடுத்த 3 நாள்களுக்கு கடுமையான பனிப்பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீா்நிலைகள், சாலையோரம் வசிப்போருக்கு மாற்று இடம்

தில்லியில் மாசுவைப் கட்டுப்படுத்துவதில் பாஜக அரசு முற்றிலும் தோல்வி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

உலக கோப்பை ஹாக்கி விழிப்புணா்வு போட்டிகள் நடத்த தீா்மானம்

பள்ளி வேன் மீது வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு: 5 போ் காயம்

திருச்செந்தூா் கோயில் சஷ்டி மண்டபத்தை கல் மண்டபமாக மாற்றக் கோரிக்கை

SCROLL FOR NEXT