இந்தியா

பனிமூட்டம்: தில்லி விமான நிலையத்தில் 100 விமானங்கள் தாமதம்,சில விமானங்கள் ரத்து

DIN

புது தில்லி: தில்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை இயக்கப்படும் விமானங்கள் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. குறைந்தது 100 விமானங்கள் தாமதமாகவும், சில ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் வெள்ளிக்கிழமை கடும் பனிமூட்டம் காரணமாக, தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களில் குறைந்தது 100 விமானங்கள் தாமதமாக புறப்படும் என்றும், சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் விமான நிலையத்திற்கு புறப்படுவதற்கு முன், அந்தந்த விமானங்களின் இணையதளங்களில் விமானங்களின் பயண நிலை குறித்த விவரங்களை தெரிந்துகொண்டு புறப்படுமாறு  பயணிகளை விமான நிறுவனங்கள் கேட்டுக்கொண்டுள்ளன. 

விமானங்கள் தாமதம் குறித்து அறியாமல் விமான நிலையம் வந்த பயணிகள், விமான நிலையத்திலேயே பல மணி நேரமாக விமான நிறுவனத்தின் அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர்.

இதனிடையே, உ.பி. ராம்பூரைச் சேர்ந்த ஃபக்ரூல் கூறுகையில், "நான் ஷார்ஜாவுக்கு விமானத்தில் செல்வதற்காக, கடும் குளிரில் டி-3 இல் 12 மணி நேரமாக காத்திருக்கிறேன். இதுபோன்ற வானிலை காரணமாக விமான பயணத்தில் தாமதம் ஏற்பட்டால் விமான நிறுவனம் பயணிகளுக்கு எந்தவித முன்னேற்பாடும் செய்யவில்லை" என்று குற்றம்சாட்டினார். 

இந்த நிலையில், விமான முனையத்தின் நுழைவு வாயில்களில் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் இவரா?

மே 14 வரை சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் வானில் தெரியும்!

சாய் சுதர்ஷன் அதிகம் பேசப்பட வேண்டும்: தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன்

வெஸ்ட் நைல் காய்ச்சல் பரவல்: மக்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை

இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த விரும்பினால்...: சோனம் கபூர் கூறுவதென்ன?

SCROLL FOR NEXT