அமிர்தசரஸ்-தில்லி இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் கொடியசைத்து தொடங்கி வைப்பு!
பஞ்சாப் மக்களுக்கு புத்தாண்டு பரிசாக அமிர்தசரஸ்-தில்லி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கப்பட்டது.
அமிர்தசரஸ்: பஞ்சாப் மக்களுக்கு புத்தாண்டு பரிசாக அமிர்தசரஸ்-தில்லி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.
ரயிலை பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியிலிருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அமிர்தசரஸ் ரயில் நிலையத்தில் உடனிருந்தார்.
மறுசீரமைக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையத்தை இன்று திறந்து வைத்த மோடி, இரண்டு அம்ரித் பாரத் மற்றும் ஆறு வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
Advertisement
Advertisement
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமிர்தசரஸ் எம்.பி. குர்ஜீத் சிங் அவுஜ்லா கூறுகையில், இங்கிருந்து வந்தே பாரத் ரயிலை அறிமுகப்படுத்துவதன் மூலம் வணிகர்கள் மற்றும் வர்த்தகர்கள் உள்பட பல்வேறு தரப்பு மக்களுக்கு வசதியாக அமையும் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.