காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே 
இந்தியா

பாஜகவின் பொய்கள் வலுவானவை: மல்லிகார்ஜூன் கார்கே

கொடுத்த வாக்குறுதிகளை மோடி அரசு நிறைவேற்றவில்லை என மல்லிகார்ஜூன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார். 

DIN

காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, மோடி அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததாகக் குற்றம் சாட்டியுள்ளார். பாஜகவினரின் பொய்கள் மிகவும் வலுவானவை எனத் தெரிவித்துள்ளார். 

தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்ட அவர், 'மோடி 2022-ல் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என வாக்குறுதி அளித்திருந்தார். எல்லா இந்தியர்களுக்கும் சொந்தமான வீடு கிடைக்கும் எனக் கூறியிருந்தார். அனைவருக்கும் 24 மணிநேரமும் மின்சார விநியோகம் செய்யப்படும் எனக்கூறினார்.

ஆனால் எதையும் நிறைவேற்றவில்லை. பாஜக-வினர் நன்றாக பொய் சொல்வார்கள் என அனைத்து இந்தியர்களுக்கும் நன்றாகத் தெரியும்' எனப் பதிவிட்டுள்ளார். 

மேலும், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், 2021ல் எடுக்கப்பட வேண்டிய பத்தாண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இன்னும் எடுக்கப்படவில்லை என மத்திய அரசைக் குற்றம் சாட்டியுள்ளார். 
  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT