மாதிரி படம் 
இந்தியா

புத்தாண்டு கொண்டாட்டம்: தலைநகரில் குவிக்கப்பட்ட காவலர்கள்!

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளைத் பலப்படுத்தியுள்ளது தில்லி காவல்துறை.

DIN

புது தில்லி: தில்லி காவல்துறை, புத்தாண்டு கொண்டாட்டத்தில் எந்தவித அசாம்பிதமும் ஏற்படாதிருக்க போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. 2,500-க்கும் அதிகமான போக்குவரத்து காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஏறத்தாழ 10 ஆயிரம் காவலர்கள் மாநிலம் முழுவதும் பணியில் ஈடுபட்டுள்ளதாக காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“புத்தாண்டைமகிழ்ச்சியோடு வரவேற்பதை உறுதி செய்வதே நாங்கள் வேண்டுவது. யாரேனும் மற்றவர்களுக்குத் தொல்லைதரும் வகையில் சாலைகளில் நடந்து கொண்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” எனத் தெரிவித்துள்ளனர்.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களைச் சோதிக்க 250 குழுக்கள் பணியில் உள்ளதாகவும் இரவு 8 மணிக்கு மேல் கானட் பிளேஸ் பகுதிக்குச் செல்லும் வாகனங்கள் முறைப்படுத்தப்படும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கானட் பிளேஸுக்கு அருகில் உள்ள ராஜீவ் செளக் மெட்ரோ ரயில் நிலையத்தில் வெளியேறும் வழி இரவு 9 மணியோடு மூடப்படும் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது.

ஹரியானா, உத்தர பிரதேச எல்லைகளில் பாதுகாப்புக்காக சாலைகளில் கூடுதல் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மக்கள் திரள் கூடும் இடங்களில் முன்கூட்டியே பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செப். 22 முதல் ஜிஎஸ்டி குறைப்புகளின் பலன்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படும்: வேளாண் அமைச்சர்!

உச்சநீதிமன்ற வாசலில் வடிகாலை கைகளால் சுத்தம்செய்த அவலம்! பொதுப்பணித் துறைக்கு அபராதம்!

5 சிக்ஸர்கள், தந்தை மறைவு... ஒரே நாளில் இலங்கை வீரருக்கு நேர்ந்த சோகம்!

போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காண்க!: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

பெண்ணாகிய ஓவியம்... ஜனனி!

SCROLL FOR NEXT